பாசிர் ரிஸ் பார்ம்வேயில் மூடப்படும் மீன் பண்ணை… S$20,000க்கு பதில் S$2,500 – அனைத்தும் தள்ளுபடி விலையில்!

OTF Aquarium/Facebook

பாசிர் ரிஸ் பார்ம்வேயில் சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வந்த மீன் பண்ணை, குத்தகைக் காலம் முடிவடையும் நிலையில் இன்றுடன் (ஜூலை 17) அது மூடப்படவுள்ளது.

மேலும், இது அரசாங்கத்தின் மறுவடிவமைப்பு திட்டத்தின் காரணமாகவும் மூடப்படுவதாக அதன் பேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருவருக்கு Omicron துணைவகை BA.2.75 – இந்தியாவிற்கு சென்றுவந்தவர்கள் என பதிவு

எனவே, அந்த பண்ணையானது அதனை காலி செய்யும் நோக்குடன் மீதமுள்ள 4,000 மீன்களுக்கான விற்பனையை நடத்துகிறது.

விற்பனை விவரம்:

பெண் கருப்பு வைர திருக்கையின் (Female Black Diamond Stingrays) அசல் விலை S$20,000… ஆனால் அதற்கு Clearance sale விலை S$2,500.

ஆண் கருப்பு வைர திருக்கையின் அசல் விலை (Male Black Diamond Stingrays) S$5,000க்கு பதிலாக S$1,000க்கு விற்கப்படுகின்றன.

அரோவானா (Arowanas) வகை வண்ண மீன்கள் S$100 முதல் S$300 வரை விற்கப்படுகின்றன, அவற்றின் அசல் விலைகள் S$1,000க்கு மேல்.

மீன்களை வளர்ப்பதற்கு தேவைப்படும் மீன் வளர்ப்புத் தொட்டிகள் மற்றும் மரத்தாலான ஸ்டாண்டுகள் உட்பட பல வகை பொருட்களையும் இந்தப் பண்ணை விற்பனை செய்கிறது.

பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ் ஊழியர் மீது வாகனத்தை விட்டு ஏற்றியதாக ஆடவர் மீது புகார்

Verified by MonsterInsights