சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் கனிவான கவனத்திற்கு…இனிமேல் இந்த நடைமுறை இல்லை.!

increased-screenings-enhancement-measure changi airport
Pic: AFP

குறுகிய காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளின் பாஸ்ட்போர்ட்களில் இனி குடிநுழைவு அனுமதிக்கான முத்திரை இடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, சிங்கப்பூருக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் மின் வருகை அனுமதிச்சீட்டு (electronic visit Passes) வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலில் மின் வருகை அனுமதிச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

மார்ச் 13- ஆம் தேதி அன்று ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

இந்நிலையில், நேற்று (மார்ச் 11) முதல் அனைத்து சோதனை சாவடிகளிலும் இந்த நடைமுறை கட்டங்கட்டமாக செயல்படுத்தப்பட்டது என குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) கூறியுள்ளது.

சிங்கப்பூர் வரும் பயணிகள் சோதனைச் சாவடிகளை சென்றடைந்த பின்னர், அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மின் வருகை அனுமதிச்சீட்டு அனுப்பப்படும். மின் வருகை அனுமதிச்சீட்டில் பயணக் காலம், அதிகபட்சமாக எத்தனை நாட்கள் தங்கலாம் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றிருக்கும்.

மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் முகவரியை சமர்ப்பிக்கலாம். இந்த மின் வருகை அனுமதிச்சீட்டு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதால் குறுகிய காலத்திற்கு சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இனி அனுமதியை முத்திரையிடத் தங்களின் பாஸ்ட்போர்ட்களில் போதுமான பக்கங்கள் இல்லை என்ற கவலை இருக்காது என குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

முழு தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட சிங்கப்பூர்!