பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டும் சிங்கப்பூரர்கள்!

Singapore worlds-most-powerful-passport

சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பொதுமக்களைக் கவலையடையச் செய்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டிருந்தாலும் கூட, பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம். இருப்பினும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோர் கட்டாயம் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் இந்த மாதம் மழை பெய்யுமா? – வானிலை நிலவரம்

இந்த நிலையில், ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பயணக் கட்டுப்பாடுகளை இவ்வாண்டு இறுதிக்குள் விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனால் சர்வதேச விமான சேவை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உள்ளது. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் பயணிகள் இவ்வாண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வெளிநாடுகளுக்கு சென்று சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், சிங்கப்பூரர்கள் தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். மேலும், அக்டோபர் 1- ஆம் தேதி முதல் வழங்கப்படும் பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்பதால், தங்களது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதில் சிங்கப்பூரர்கள் தீவிரம் காட்டி வருகின்றன.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள 20 அடையாளச் சின்னங்களில் நீல நிற ஒளியூட்டு

“நேற்று முன்தினம் (01/10/2021) மட்டும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இணையதளம் வழியாக சுமார் 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் சராசரியாக நாள்தோறும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் எண்ணிக்கையைக் காட்டிலும், இது நான்கு மடங்கு அதிகம் ஆகும். பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் 70 சிங்கப்பூர் டாலராக இருக்கும். விண்ணப்பக் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பாஸ்போர்ட் வைத்திருப்பது கட்டாயம் இல்லை; பாஸ்போர்ட் காலாவதியாகி, அதைப் புதுப்பிக்கவில்லை என்றாலும், அபராதம் விதிக்கப்படாது. பாஸ்போர்ட்டுக்கு https://www.ica.gov.sg/ என்ற இணையதளம் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்” என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (Immigration and Checkpoints Authority- ‘ICA’) தெரிவித்துள்ளது.

இது குறித்து சுமதி ராஜேந்திரன் என்பவர் கூறுகையில், “பத்தாண்டுகளுக்குச் செல்லத்தக்க பாஸ்போர்ட்டுகள் சிங்கப்பூரர்களுக்கு வசதியாக இருக்கும். இதன் மூலம் செலவு குறையும். வரும் டிசம்பர் மாதம் சொகுசுக் கப்பல் மூலம் பயணம் மேற்கொள்ள விருப்பத்தால், தனது ஆறு வயது மகனின் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க விண்ணப்பித்தேன்” எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு மற்றும் மரணங்கள்

பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் அதிகரித்தப் போதிலும், 16 வயதுக்கும் குறைவான சிங்கப்பூரர்களின் பாஸ்போர்ட் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுப்படியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.