பாஸ்போர்ட் இந்த நிலையில் இருந்தால் சிறை நிச்சயம்: சிங்கப்பூர் to திருச்சி… சிக்கிய ஊழியருக்கு சிறை

Passport tearing Singapore

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த ஊழியர் தனது பாஸ்போர்ட்டால் சிறையில் தண்டனை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

இண்டிகோ விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது. அதில் 49 வயதான துரைராஜ் என்ற ஊழியர் வந்துள்ளார்.

MRT ரயிலில் சிறுநீர் கழித்த பெண் – வீடியோ வைரல்.. நெட்டிசன்கள் காட்டம்

அவர் புதுக்கோட்டை மாவட்டம் கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் வழக்கம் போல பயணிகளை சோதனை செய்தனர்.

அதன் வரிசையில் துரைராஜ் பாஸ்போர்ட் சோதனை செய்யப்பட்டது, அப்போது அதில் 4 பக்கங்கள் கிழிக்கப்பட்டு சேதம் அடைந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதன் பின்னர் அவரை போலீசிடம் அவர்கள் ஒப்படைத்தனர். இந்நிலையில், அவரை கைது செய்த போலீஸ் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், விசாரணை நடந்து வருகிறது.

வேலையில்போது மின்சாரம் பாய்ந்து ஊழியர் பலி: தகுந்த பாதுகாப்பில்லை.. சிக்கிய முதலாளி – S$100,000 அபராதம்