சிங்கப்பூரைச் சேர்ந்த பேராசிரியர் பால் தம்பையா தொற்றுநோய்களுக்கான சர்வதேச சங்கத் தலைவராக தேர்வு..!

Paul thambayah elected President of the International Association for Infectious Diseases
Paul thambayah elected President of the International Association for Infectious Diseases (Photo: TODAY)

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியரும் தொற்றுநோய்த் துறை வல்லுநருமான 55 வயதான பால் தம்பையா, தொற்றுநோய்களுக்கான சர்வதேச சங்கத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 2022 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரில் செயல்படும் அந்த சங்கத்திற்கு தலைவராகப் பொறுப்பேற்கும் முதல் சிங்கப்பூரர் இவர் ஆவார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழல், மோசடி குற்றங்களுக்காக இந்திய நாட்டவருக்கு சிறை மற்றும் அபராதம்..!

தலைவராக பொறுப்பேற்கும் வரை, தற்போது தலைவர் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் அலிசன் ஹோல்ம்ஸூக்குத் (Alison Holmes) துணையாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 155-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 90,000-க்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட அந்தச் சங்கத்தின் தலைமை பொறுப்பேற்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் தொற்றுநோய்களுக்கான சங்கத்தின் தலைவராக அவர் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் சிங்கப்பூர் ஜனநாயக கட்சியின் தலைவராகவும் பொறுப்புவகிக்கிறார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ஆம் கட்டம் (Phase 2) – சர்வதேச பயண கட்டுப்பாடுகள் தளர்வு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg