வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுக்காத முதலாளிகளுக்கு தண்டனை..!

(Photo: Facebook/Time News International)

பணிப்பெண்கள் சன்னல்களைத் துடைக்கும்போது அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகளை வழங்காத முதலாளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கான தண்டனை அவர்களின் முதலாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020வரை சுமார் 60 முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக நான்கு சுற்றுலாத் தளங்களை அறிமுகம்.!

குற்றத்தின் அளவைப் பொறுத்து தண்டனைகள் வழக்கப்பட்டதாகவும், சிலருக்கு எச்சரிக்கையும், இன்னும் சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சென்ற மாதம் 29ஆம் தேதி இந்தோனீசியப் பெண்மணி (வயது 26) ஒருவர் ஹவ்காங் MRT நிலையத்திற்கு அருகாமையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் மயங்கி கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணி காலமானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் பெண்மணியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், பணிப்பெண் மையம் அவரின் குடும்பத்தாருடனும் முதலாளியுடனும் தொடர்புகொண்டு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்காத முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ளம், நிலச்சரிவால் இந்தோனேசியா, திமோர்-லெஸ்டேவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – சிங்கப்பூர் ஆழ்ந்த அனுதாபம்