சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட் – தூதரகம்..!

Phase 6 Schedule of flights from Singapore as of 10/09/2020
Phase 6 Schedule of flights from Singapore

சிங்கப்பூரிலிருந்து, 6ஆம் கட்டமாக தொடர்ந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டு வருகிறது.

அதே வேளையில், நாளை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு செல்லும் விமானங்களுக்கான புதிய இணையதள முன்பதிவுகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்தோருக்கு தொடரும் நோய்த்தொற்று பாதிப்புகள்..!

தமிழ்நாட்டு அரசின் பயண விதிமுறைகள் குறித்து விளக்கம் பெறும்வரை, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அதுகுறித்த புதுப்பிப்புகளை தூதரகம் இன்னும் வெளியிடவில்லை.

தமிழ்நாட்டு அரசுடன் இந்தியத் தூதரகம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நாளை 14ஆம் தேதி வரை விமானங்கள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளையில், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள், அதாவது சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதவர்கள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பு COVID-19 சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும்.

அண்மையில் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன.

சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதோர், பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரம் முன்பாகப் COVID-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் COVID-19 தொடர்பான அமைச்சக பணிக்குழு (COVID-19 multi-ministry task force) இன்று (செப்டம்பர் 9) இதனைத் தெரிவித்தது.

வரும் செப்டம்பர் 17 நள்ளிரவு முதல் சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு இந்தத் நடைமுறை பொருந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காவல்துறையின் சோதனைக்கு காரை நிறுத்த மறுத்து, வேகமாக சென்று மரத்தில் மோதி விபத்து..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts