சிங்கப்பூரிலிருந்து வரும் நாட்களில் தமிழகம் செல்லும் விமானங்களின் அப்டேட்..!

Phase 6 Schedule of flights from Singapore
Phase 6 Schedule of flights from Singapore

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த 6ஆம் கட்டத்தில், திருச்சிராப்பள்ளிக்கு அதிக விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும், சென்னையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க : லிட்டில் இந்தியாவில் ஹனிஃபா கடை உள்ளிட்ட இடங்களுக்கு தொற்று நோயாளிகள் சென்றுவந்துள்ளனர்..!

ஏர் இந்தியா வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் முன்பதிவு செய்யலாம் என்றும் சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

Table: HCI Singapore

அதே வேளையில், இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள், அதாவது சிங்கப்பூர்வாசிகள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதவர்கள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்பு COVID-19 சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும்.

சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் அல்லாதோர், பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரம் முன்பாகப் COVID-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் COVID-19 தொடர்பான அமைச்சக பணிக்குழு (COVID-19 multi-ministry task force) இதனை தெரிவித்தது.

இது செப்டம்பர் 17 முதல் சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புகளுக்கு: https://hcisingapore.gov.in/noticeboard

விமான முன்பதிவிற்கு : https://www.airindiaexpress.in/en/book-flight

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் தங்கும் விடுதிகளில் ஒன்பது பேருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…