சிங்கப்பூரில் காரின் கீழே பதுங்கி இருந்த மிகபெரிய மலைப்பாம்பு (வீடியோ) – ஓட்டுனர்கள் உஷார்

District Singapore Facebook

Mercedes காரின் கீழே பதுங்கி இருந்த மிக பெரிய மலைப்பாம்பு ஒன்றை NParks சீருடை அணிந்த ஊழியர்கள் பிடித்தனர்.

District Singapore” என்ற பேஸ்புக் குழுவில் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) அது தொடர்பான வீடியோ வெளியானது.

போலி ஓட்டுநர் உரிமம்… சிக்கிய வெளிநாட்டவர் – உடனே கைது செய்த போலீஸ்

கார் ஆட்டோ கடையில், சிவப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருப்பதை அந்த வீடியோ மூலமாக காண முடிகிறது.

இதனை அடுத்து, NParks ஊழியர்கள் காரின் அடியில் இருந்து மலைப்பாம்பு வெளியே எடுக்க வேலையில் ஈடுபடுவதையும் காண முடிந்தது.

கடைசியாக மிக பெரிய மலைப்பாம்பை ஊழியர்கள் வெளியே எடுப்பதையும் அந்த வீடியோ காட்டுகிறது.

“உயிருள்ள பாம்பை கண்டால், நீங்கள் அமைதியாக இருங்கள், அதனை விட்டு தூரமாக செல்லுங்கள்” என்று NParks கூறியுள்ளது.

பொது இடங்களிலோ அல்லது உங்கள் உடைமையிலோ பாம்புகளை கண்டால், தயவுசெய்து NParksன் 24 மணிநேர சேவை எண்: 1800-476-1600 அழைக்கவும் என்றும் அது கூறியுள்ளது.

Video: phython-car

தோ பாயோவில் தீ விபத்து: 50 பேர் வெளியேற்றம்