மினிபஸ், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – சம்பவ இடத்தில் ஒருவர் மரணம்!

PIE accident dead
(Photo: Facebook / SG Road Vigilante)

பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) இன்று (மார்ச் 13) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் 57 வயது ஆடவர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புக்கிட் திமா எக்ஸ்பிரஸ்வேயில் (BKE) இருந்து வெளியேறும் முன், துவாஸை நோக்கி செல்லும் PIE நெடுஞ்சாலையில் மினிபஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இலவச முகக்கவசத்திலும் மோசடி… 2 பேர் பிடிபட்டனர்!

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) மற்றும் சிங்கப்பூர் காவல் படை (SPF) ஆகியவைக்கு இன்று காலை 6:43 மணிக்கு விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டதாக மதர்ஷிப் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வாகனத்தின் கீழ் சிக்கியதாகவும், அவரை SCDF அதிகாரிகள் தூக்கும் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அவர் சம்பவ இடத்தில் இறந்ததாக துணை மருத்துவரால் உறுதி செய்யப்பட்டது.

இதில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 38 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

துவாஸ் உணவகத்திற்குள் சென்று மோதிய வேன் – 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!