PIE நெடுஞ்சாலையில் லாரி, பேருந்து மோதி விபத்து – 12 பேர் மருத்துவமனையில் அனுமதி

accident involving lorry and bus along PIE
(Photo: Screengrab from video/Telegram/SGRoad Blocks/Traffic News)

Singapore: பான் தீவு அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) இன்று (பிப். 25) காலை லாரி மற்றும் பேருந்து விபத்துக்குள்ளானதில் 75 வயது முதியவர் உட்பட 12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) காலை 8 மணியளவில் ஜலான் பஹார் வெளியே, துவாஸை நோக்கி செல்லும் வழியில் PIEஇல் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து சென்னை, மதுரை, திருச்சி செல்ல.. மார்ச் வரை!

மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட 75 வயதான முதியவர், விபத்தில் சிக்கிய லாரியின் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டார்.

மேலும், 22 முதல் 39 வயதுக்குட்பட்ட 11 பயணிகள் இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுவுடன் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்து குறித்து காவல்துறை விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

பாதுகாப்பு விதிகளை மீறிய 234 பேருக்கு அபராதம் – 4 கடைகளை மூட உத்தரவு