வந்துவிட்டது ‘Pikachu’ விமானம் – நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் அதில் பறக்கலாம்

pikachu-jet-not-real-photo
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் குறைந்த கட்டண துணை நிறுவனமான Scoot, The Pokémon நிறுவனத்துடன் இணைந்து Pikachu Jet ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.இந்தச் செய்தியால் போகிமான் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
பிகாச்சுவுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.விமானத்தில் பிகாச்சுவின் படங்கள் இடம்பெற்றால் அந்த விமானத்தைப் பார்க்கவே அட்டகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

பிகாச்சு விமானத்தில் 375 பேருக்கான இருக்கை வசதிகள் உள்ளது.இது ரு போயிங் 787-9 ட்ரீம்லைனர் ஆகும்.பொருளாதார வகுப்பில் 340 இருக்கைகளையும் ScootPlus இல் 35 இடங்களையும் கொண்டுள்ளது.

 

அதிகாரப்பூர்வமாக பிகாச்சு விமானம் எப்படி இருக்கும் என்பதை ஸ்கூட் வெளியிடவில்லை என்றாலும், சில புகைப்படக் கலைஞர்கள் அதைக் காண முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.செப்டம்பர் 9, 2022 அன்று டோக்கியோ (நரிடா) மற்றும் சியோலுக்கு ஆரம்ப வழிகள் அமைக்கப்பட்டு, விமானச் சேவை வழங்கப்படும் என்று Scoot அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் டோக்கியோவுக்கு S$333 மற்றும் சியோலுக்கு S$231 இலிருந்து தொடங்குகிறது.போயிங் 787-9 ட்ரீம்லைனர் மூலம் இயக்கப்படும் பிற வழிகளிலும் பிகாச்சு விமானம் இயக்கப்படும்.எனவே,Pikachu ஜெட் விமானத்தை தேர்வு செய்யாவிட்டாலும் கூட, நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், இறுதியில் நீங்கள் அதில் ஏறலாம்.