சிங்கப்பூரில் பொது மரங்களிலிருந்து பழங்களை பறித்தால் இனி கூடுதல் அபராதம்..!!

Plucking fruits from public trees could land you a S$50,000 fine, Lawrence Wong says

சிங்கப்பூரில் பொது மரங்களிலிருந்து பழங்களை பறித்தால் இனி S$ 50,000 அபராதம் விதிக்கப்படும் என்று லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்கள் இனி எச்சரிக்கையுடன் பொது இடங்களில் நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில், சிங்கப்பூர் பகுதிகளில் நடக்கும்போது தரையில் விழுந்த பழத்தை நீங்கள் கண்டால், அதை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மீறி பழங்களைப் பறித்தாள் S$ 5,000 அபராதம் – அல்லது S$ 50,000 அபராதம் மற்றும் / அல்லது ஆறு மாத சிறை ஆகியவை நீங்கள் அனுபவிக்க நேரிடும் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இது குறித்து எம்.பி. டாரில் டேவிட் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, தேசிய மேம்பாட்டு அமைச்சர் லாரன்ஸ் வோங் ‘பூங்காக்கள் மற்றும் மரங்கள்’ சட்டத்தின் கீழ் அசாதாரண சட்டத்தை கடந்த திங்கள்கிழமை (அக். 7) அன்று மீண்டும் கொண்டு வந்துள்ளார்.

பழங்களை பறிக்க அல்லது அரசு பொது மரங்களில் இருந்து கீழே விழுந்த பழங்களை எடுக்க விரும்பினால் அனுமதிக்காக NParks ஐ அணுக வேண்டும்” என்று அமைச்சர் கூடுதல் தகவல் கூறியுள்ளார்.

மேலும், பழங்கள் மரங்களைப் போலவே நாட்டிற்கு சொந்தமானது என்று கூறினார்.