சிங்கப்பூரின் முன்னோடி தொழிலதிபர் அமீரலி ராஜபலி ஜூமாபோய் மறைவு – பிரதமர் லீ இரங்கல்

PM Lee condolences to Ameerali
(PHOTO: Lee Hsien Loong/Instagram)

சிங்கப்பூரின் முன்னோடிகளில் ஒருவரும், முக்கிய தொழிலதிபரான திரு அமீரலி ராஜபலி ஜூமாபோயின் (Ameerali Rajabali Jumabhoy) மறைவுக்குப் பிரதமர் லீ சியென் லூங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை திரு அமீரலி (94 வயது) காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்ததாக திரு லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 16 நாட்களில் பதிவான உள்நாட்டில் முதல் தொற்று பாதிப்பு!

தனது வாழ்க்கையில், சமூகத்தில் நன்கு விரும்பப்பட்ட ஒரு தூணாக திரு அமீரலி இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்ஸ் ஷாப்பிங் சென்டரை உருவாக்கவும், மேலும் Lau Pa Satஐ மறுவடிவமைக்கவும் உதவியதாகவும் திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

அவரின் பொது சேவைகள் குறித்தும் குறிப்பிட்ட பிரதமர் லீ, மெண்டகி (Mendaki) ஹோல்டிங்ஸ், MUIS, தேசிய குற்றத் தடுப்பு கவுன்சில் மற்றும் @singaporepoly மற்றும் @nhb_sg இன் குழுவில் சேவையாற்றியதைப் பிரதமர் லீ பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார்.

அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் திரு லீ தெரிவித்துக்கொண்டார்.

COVID-19: விதிகளை மீறிய 6 பேருக்கு தலா S$3,000 அபராதம் விதிப்பு!

குழந்தையுடன் கவலை மறந்து விளையாடும் வெளிநாட்டு ஊழியர்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…