“சிங்கப்பூரின் அரசியல் தவறாகப் போனால் நிர்வாகம், மக்கள் வாழ்வும் தவறாக போய்விடும்” – பிரதமர் லீ

(PHOTO: MCI)

சிங்கப்பூரின் அரசியல் தவறாகப் போனால், நாட்டின் நிர்வாகமும், அனைவரின் வாழ்வும் தவறாக போய்விடும் என்று பிரதமர் லீ சியென் லூங் இன்று (நவம்பர் 6) கூறினார்.

இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்கனவே மற்ற நாடுகளில் நடந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுப் போக்குவரத்தில் ஆபத்தில் இருந்த பயணிகளுக்கு உதவிய எட்டு பயணிகளுக்கு விருது!

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் செயல் கட்சி (PAP) மாநாட்டில் 3,000க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்களிடையே திரு லீ உரையாற்றினார்.

கட்சி தனது கடமைகளை ஒருபோதும் லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், அதன் தலைமையை புதுப்பிக்க தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் சர்ச்சைக்குரியதாக மாறும்போது மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் திசைதிருப்பப்பட்டு முடங்கிப்போகின்றன என்றும், இதனால் சமூகம் பிளவுபடுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதற்கு உதாரணமாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் அரசியல் சூழல் குறித்து திரு லீ உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொண்டார்.

“சாலை விதிகளை பின்பற்றுங்க.. உங்களுக்கும் குடும்பம் இருக்கு”… ஊழியரின் பொறுப்பில்லா செயல்