சிங்கப்பூர் செய்திகள்

நியூஸிலாந்து பொதுத் தேர்தல்: பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்னுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ வாழ்த்து..!

PM Lee Jacinda Ardern
PM Lee congratulates Jacinda Ardern (Photo Credits: Kenji Soon, via MCI)

நியூசிலாந்தில் நடைப்பெற்ற பொதுத் தேர்தலில், பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் (Jacinda Ardern) மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றிக்காக ஆர்டெர்னுக்கு, சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க : ஸ்கூட் விமானப் பணிப்பெண்ணை மானபங்கம் செய்த இந்தியப் பயணிக்கு 4 மாதச் சிறை..!

தனது கடிதத்தில், பிரதமர் ஆர்டெர்ன் மற்றும் அவரது அரசாங்கம் கோவிட் -19 நெருக்கடியை கையாண்ட விதத்தை பாராட்டி எழுதியிருந்தார்.

பொதுமக்கள் நம்பிக்கை, அவரது தலைமையின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை இந்த மகத்தான வெற்றி குறிப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு நலன்களை முன்னேற்றுவதற்காக ஆர்டெர்னுடன் இணைந்து பணியாற்றவும் எதிர்பார்த்து இருப்பதாக திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

சென்ற ஆண்டு மே மாதம், பிரதமர் ஆர்டெர்ன் சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டபோது, இருநாடுகளும் இடையே மேம்பட்ட பங்காளித்துவத்துவத்துக்கு வகைசெய்யப்பட்டதை திரு லீ சுட்டி காட்டினார்.

இதையும் படிங்க : ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

Related posts