“சிங்கப்பூரில் வேலை அனுமதி திட்டங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்” – பிரதமர் லீ..!

(Photo: REUTERS)

சிங்கப்பூரில் வேலை அனுமதி திட்டங்களை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்று என்று பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பேசிய திரு லீ, சிங்கப்பூரர்களின் வேலைகள் மற்றும் வெளிநாட்டினருடனான போட்டி குறித்த கவலை புரிவதாக ஒப்புக் கொண்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தனியார் பேருந்தை திருடியதாக ஆடவர் ஒருவர் கைது..!

பொருளாதார வீழ்ச்சியைக் கருத்தில் கொண்ட இந்த உணர்வுகள் முற்றிலும் புரிந்துகொள்ளக்கூடியவை என்று அவர் கூறினார்.

வெளிநாட்டினருக்கு எதிரான இந்த உணர்வு உலகெங்கிலும் அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் எதிர்காலங்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதே போல், EP வேலை உரிமம், S Pass அட்டை ஆகியவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவிட் -19 தொற்று சூழலில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை EP மற்றும் S Pass வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 22,000 குறைந்துள்ளது என்று மனிதவள அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியுள்ளார்.

வேலை வாய்ப்புகள் குறைந்து, உள்நாட்டு ஊழியரணியின் வருமானம், கல்வி, ஆற்றல் ஆகியவை் அதிகரித்துள்ளதாகவும், மேலும் அதற்கு ஏற்ப, வேலை அனுமதித் திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் திருமதி. தியோ கூறியுள்ளார்.

EP அனுமதியில் வேலை செய்யும் உயர்­மட்ட வெளி­நாட்டு நிபுணர்களுக்கான ஒதுக்­கீட்டு முறை என்­பது எண்­ணிப்­பார்க்க முடி­யாது அல்ல என்­றும், ஆனால் அத்தகைய நடவடிக்கை விவேகமற்றதாக இருக்கும் என்­றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட 3 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிய பாதிப்புகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
 Facebook
 Twitter
 Telegram

Sharechat

Instagram