சிங்கப்பூர் பிரதமர் ஏப்ரல் 30 அன்று மே தின உரை ஆற்றவுள்ளார்; மே தின கூட்டம் நடைபெறாது..!

PM Lee to deliver May Day Message on Apr 30; no physical rally this year: NTUC
PM Lee to deliver May Day Message on Apr 30; no physical rally this year: NTUC ( Photo courtesy: pmo.gov.sg)

பிரதமர் லீ சியென் லூங் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ​​இரவு 7.30 மணிக்கு தனது மே தின செய்தியை மக்களிடம் பகிர்ந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று காரணமாக இந்த ஆண்டு மே தின கூட்டம் நடைபெறாது என்று தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: 4 புதிய குழுமங்கள் அடையாளம்; தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி உடையோர் 886 பேர் பாதிப்பு..!

அதற்கு பதிலாக, திரு லீயின் மே தின செய்தி தேசிய தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும்.

அதாவது பிரதமர் அலுவலகத்தின் முகநூல் பக்கம் மற்றும் யூடியூப், அதே போல் NTUC சிங்கப்பூரின் பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக சேனல்கள் வழியாக ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்தே உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து ஜூன் வரை திட்டமிடப்பட்டு நடைபெறவிருந்த மே தின கொண்டாட்ட நிகழ்வுகளை மறுஆய்வு செய்து வருவதாகவும் தொழிலாளர் இயக்கம் தெரிவித்துள்ளது.

சில முக்கிய மே தின நிகழ்வுகள் இந்த ஆண்டு வித்தியாசமாக செய்யப்படும் என்று NTUC தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், 1,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர் இயக்கத் தலைவர்களும், முத்தரப்பு பங்காளிகளும் தங்கள் தொழிலாளர்களின் நலன்களை முன்னேற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த NTUC-இன் மே தின பேரணியில் கூடுவார்கள்.

இந்த வருடம் இணையம் வழியான கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும், அதில் சுமார் 500 பேர் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு மே தின விருதுகள் மற்றும் மே தின ஃபீஸ்டா இரண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்புகளைப் பாராட்ட ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆராயும் என்றும் NTUC தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூர் ஏர்ஷோ மைதானம் தனிமைப்படுத்தப்படும் இடவசதியாக மாற்றம்..!