சிங்கப்பூர் பிரதமர் லீக்கு “புகழ்பெற்ற விருந்தினர்” என பெயர்சூட்டி கௌரவம்..!

PM named Distinguished Visitor of S'pore Cricket Club

சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம், $300,000 நன்கொடையாக வழங்கியுள்ளது.

SportSG அமைப்பின் Sport cares நன்கொடைப் பிரிவின் கீழ், வசதி குறைவாக உள்ள சிங்கப்பூரர்களும் விளையாட்டுகளை ரசிக்க, சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம், 300,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளது.

சிங்கப்பூரின் 200 ஆண்டு நிறைவை ஒட்டி சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் நன்கொடைத் திரட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் சார்பில் நேற்று நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில், பிரதமர் லீ சியென் லூங் அவர்களுக்கு, “புகழ்பெற்ற விருந்தினர்” என்ற பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த 167 ஆண்டுகளாக பாடாங், சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் போன்ற சில அம்சங்கள் தொடர்ந்து அப்படியே இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

விளையாட்டாளர்களை ஊக்குவிப்பது போன்ற, நற்செயல்களுக்கு நன்கொடை திரட்டும் சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத்தின் வழக்கத்தைப் பிரதமர் லீ பாராட்டினார்.