அதிஷ்ட குலுக்கல் மூலம் பணம் விழுந்துள்ளதாக கூறி மோசடி – SPF எச்சரிக்கை!

The Police would like to alert members of the public to a new variant of the lucky draw scam.

அதிஷ்ட குலுக்கல் மூலம் பணம் விழுந்துள்ளதாக கூறி மோசடி நடப்பதாக சிங்கப்பூர் போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் மொபைலிற்கு ஒரு அறியப்படாத வெளிநாட்டு எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அவருக்கு குலுக்கல் முறையில் பணம் கிடைத்துள்ளது, என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும், வாட்ஸ்அப் மூலம் உள்ளூர் எண்ணிலிருந்து தொடர்பு கொள்ளுமாறு தகவல் இடம் பெற்றிருந்தது. அதில் அவர், “சிங்கப்பூர் போன் நம்பர் வாட்ஸ்அப் லக்கி டிராவை” வென்றதாகக் கூறியிருந்தனர்.

பாதிக்கப்பட்டவருக்கு வங்கி காசோலையின் புகைப்படம் வாட்சப் மூலமாக அவரை நம்ப வைப்பதற்காக அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் அவரது வங்கி கணக்கு எண்ணை வழங்குமாறும் கேட்டுள்ளனர்.

அதிஷ்ட குலுக்கல் மோசடி

பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பரிசு வேண்டாம் என்று மறுத்தபோது, அவரை போலீஸிடம் போட்டு விடுவதாக கூறி மோசடி கும்பல் மிரட்டியுள்ளனர். கூடுதலாக, சீருடையில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படத்தையும் அனுப்பியுள்ளனர்.

அதிகாரிகளுடன் சிக்கலில் சிக்கிவிடுவோமோ? என்ற அச்சத்தில் பாதிக்கப்பட்டவர் மோசடி கும்பல் கூறுவது போல் Singtel Dash மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.

இதனை அடுத்து, இது தொடர்பாக பொது மக்கள் பின்வரும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு SPF அறிவுறுத்தியுள்ளனர் ;

பீதி அடைய வேண்டாம்;

எந்த ஒரு அரசாங்க நிறுவனமும் பொதுமக்களிடம் பணம், தனிப்பட்ட விவரங்கள், வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை தொலைபேசியில் கேட்காது. அதனால் பீதி அடையாமல் இது போன்ற சூழ்நிலையில் எந்த ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களை கலந்து கொள்ளவும்.

நம்ப வேண்டாம்;

இது போன்ற செய்திகளையோ அழைப்புகளையோ நீங்கள் பெற்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் அதிஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்றுருந்தால் அதற்காக நீங்கள் எந்தவித முன் பணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொடுக்க வேண்டாம்;

இது போன்ற எந்த ஒரு அலைபேசி எண்ணிலிருந்து கால் அல்லது குறுந்தகவல் மூலம் பணம் கேட்டால் அதற்காக நீங்கள் உடனே பணத்தை கொடுத்து விட வேண்டும்.

புகார்களுக்கு:

இது போன்ற குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல்களை நீங்கள் வழங்க விரும்பினால், தயவுசெய்து போலீஸ் ஹாட்லைனான 1800-255-0000 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

ஆன்லைனில் www.police.gov.sg/iwitness என்ற வலைத்தளத்தின் மூலமும் தெரிவிக்கலாம்.

மேலும், அவசர போலீஸ் உதவிக்கு தயவுசெய்து ‘999’ ஐ டயல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் .