சிங்கப்பூரில், மோசடி குற்றங்களுக்காக 15 வயது சிறுவர் உட்பட 128 சந்தேக நபர்களிடம் போலீசார் விசாரணை!

rental-scams-spore

கடந்த திங்கள் (செப்டம்பர் 16) மற்றும் வெள்ளிக்கிழமை இடையே தீவு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர், மோசடி மற்றும் நூதன பண திருட்டு நடவடிக்கைகளுக்காக 128 சந்தேக நபர்களை போலீசார் விசாரணை நடத்தினர்.

ஐந்து நாட்கள், வணிக விவகாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஏழு பிரிவுகளில் போலீசார் இந்த மோசடிக்கு எதிரான சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுமார் 260 மோசடி குற்றங்களில் 80 ஆண் மற்றும் 15 முதல் 74 வயதுக்குட்பட்ட 48 பெண், ஆகியோர் சந்தேக நபர்களாக சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக மோசடிகள் இ-காமர்ஸ் மற்றும் கடன் மோசடிகள் ஆகும்.

இதுவரை அவர்கள் மோசடிகளில் ஈடுபட்ட மொத்த தொகை $231,000 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுபோன்ற மோசடி குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.

ஊழல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் பண மோசடி செய்த குற்றவாளிகள் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம், மேலும் 500,000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.