சிங்கப்பூரில் COVID-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 88 பேர் மீது விசாரணை

வாடகை வாகனத்தில் ஒன்றாக வந்த ஆடவருடன் வாக்குவாதத்தில்

இரண்டு தனித்தனியான சம்பவங்களில், COVID-19 பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறியதாக 88 பேர் விசாரணையில் உள்ளனர் என்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 23) செய்தி வெளியீட்டில் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஜென்டிங் லேன் வழியில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஒன்றுகூடியது தொடர்பான தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜாலான் புக்கிட் மேராவில் உள்ள வீட்டில் தீ விபத்து – இருவர் மருத்துவமனையில் அனுமதி

மேலும், 48 ஆண்களும் 17 பெண்களும் அங்கு குடித்துவிட்டு ஒன்று கூடி இருந்ததாக கூறப்படுகிறது.

இன்னொரு சம்பவத்தில், பிப்ரவரி 19 அன்று எமரால்டு ஹில் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்,

அங்கு 14 ஆண்கள் மற்றும் ஒன்பது பெண்கள் குடித்துவிட்டு, புகைபிடித்தல் மற்றும் பாடிக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிதாக தொற்று பாதிப்பு!

அந்த விருந்தில் பணியாற்றியதாக சந்தேகிக்கப்படும் 23 வயதான சீன நாட்டவர், முறையான வேலை அனுமதி அவரிடம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் மற்றும் S$20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இரண்டு சம்பவங்களிலும், முறையான உரிமம் இல்லாமல் பொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானம் வழங்கியதாக நம்பப்படும் குற்றத்தில் 2 பேர் விசாரிக்கப்படுவர் என்று காவல்துறை தெரிவித்தனர்.

ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 24 வயது ஆடவர் கைது