சிங்கப்பூரில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஆடவர்; வேண்டுமென்றே தொந்தரவு கொடுத்த பெண்.!

Police investigation gong women
Pic: livanes ramu/FB

சிங்கப்பூரில் அண்டை வீட்டுக்காரர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, வேண்டுமென்றே சத்தம் எழுப்பி தொந்தரவு செய்தற்காக 48 வயது பெண் ஒருவர் மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இணையத்தில் பகிரப்பட்டு வரும் அந்த காணொளியில், 48 வயது பெண் ஒருவர் அவரது பக்கத்து வீட்டுக்காரர் மணியடித்து பூஜையில் ஈடுபட்டிருந்த சமயத்தில், வேண்டுமென்றே காங் (Gong) என்னும் வெண்கலத் தட்டைத் தட்டி இடையூறு செய்வது தெரிகின்றது.

‘கொரோனா வைரஸை ஆஸ்திரேலியா மிகச்சிறப்பாக கையாண்டுள்ளது’- சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு!

இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட திரு. லிவனேஷ் ராமு என்பவர் காணொளியை முகநூலில் பதிவேற்றினார். அதில் அவர், பெரும்பாலான மற்ற இந்துக்களைப் போலவே என் வீட்டிலும் வாரத்திற்கு இரு முறை 5 நிமிட வழிபாடு இடம்பெறும் என அவர் காணொளியில் குறிப்பிட்டார்.

மேலும், தாமும் தமது குடும்பத்தினரும் காவல்துறையிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக திரு.லிவனேஷ் மற்றொரு முகநூல் பதிவில் கூறியுள்ளார். தொந்தரவு செய்ததாக நம்பப்படும் அந்த பெண் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

விசாரணை குறித்த முடிவு வெளிவரும்வரை தமது பக்கத்து வீட்டுக்காரரின் செயல்கள் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என திரு.லிவனேஷ் குறிப்பிட்டுள்ளார்‌.

சிங்கப்பூரில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட வரும் நாட்களில் அனுமதி.!