சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமி அழைப்பு..!

புதுவை முதலமைச்சர் திரு நாராயணசாமி , தொழில் அமைச்சர் திரு ஷாஜஹான் , PIPDIC தலைவர் திரு. சிவா குழுவினர் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் புதுச்சேரி மாநிலத்தில் எந்தெந்த துறைகளில் முதலீடு செய்யலாம் என்னென்ன தொழில் வாய்ப்புகள் அங்குள்ளது என்ற விபரங்களை எடுத்துரைத்து அழைப்பு விடுத்தனர்.

முதலீட்டாளர்கள் சந்திப்பை ஒருங்கிணைத்த நிறுவன பொறுப்பாளர் திருமதி ஷர்மிளா புதுச்சேரி நில அமைப்பு இயற்கை அழகு ஆகியவற்றை எடுத்துக்கூறி காணொளிகளின் உதவியுடன் விளக்கினார். தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்திய புதிய நிலா மு. ஜஹாங்கீர் தன் பூர்வீக மாநிலமான புதுவை பற்றியும் அங்குள்ள முதலமைச்சர் மாண்புமிகு திரு நாராயணசாமி தலைமையிலான அரசு செயல்படும் விபரங்கள் குறித்தும் எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார்.

பிப்டிக் வாரிய தலைவர் திரு சிவா, தொழில்துறை அமைச்சர் எம் ஓ ஹெச் எஃப் ஷாஜகான் புதுவை மாநிலத்திலுள்ள தொழில் வாய்ப்புகள், தொழில் துவங்க தேவையான நில குத்தகை, நீர், மின்சாரம் , மனிதவளம் குறித்து விபரமாக கூறினர்.

புதுவை மாநிலம் விற்பனைக்கு அல்ல; மேம்பாட்டிற்கு மட்டுமே என்ற கருத்தை அமைச்சர் ஷாஜஹான் வலியுறுத்தினார்.

இறுதியாக முதலமைச்சர் , புதுச்சேரி அரசாங்கத்தின் துரித செயலாக்கங்கள் , எளிய அணுகுமுறை மற்றும் வளங்கள் குறித்து முத்தாய்ப்பாக எடுத்துரைத்து முதலீட்டாளர்களை புதுச்சேரி மாநிலத்தில் முதலீடு செய்து தொழில் துவங்க அழைப்பு விடுத்தார்.

அங்கு நிலம் குத்தகைக்கு மட்டுமே தரப்படும், அம்மாநில மக்களுக்கு அறுபது விழுக்காடு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கண்டிப்பான எதார்த்த வார்த்தைகள் முதலீட்டாளர்களை கவரும் அம்சம்.

சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தக சபை, MES குழுமம் , மித்ரா இன் குழுமம் திரு ஜெகதீஷ் , திருமதி விஜி ஜெகதீஷ் , ஶ்ரீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ் திரு ஜோதி மாணிக்க வாசகம், யூனிப்ரோ குழும தலைவர் ஜாபர் கனி, ஆடிட்டர் ஜாபர் அலி , ஆடிட்டர் டாக்டர் காதர், ஆடிட்டர் நாராயண மோஹன், ஆடிட்டர் அக்பர் அலி , கிளிஃபர்ட் மணி எக்ஸ்சேஞ்ச் முஹம்மது ரஃபீக் , முஸ்தபா நிறுவன மனிதவளத்துறை மேலாளர் முஹம்மது கெளஸ் , டாக்டர் தீன், பாவா டெலிகஸி நிறுவன தலைவர் ஃபாரூக் மற்றும் பல்வேறு நிறுவன பிரதிநிதிகள், சிறிய நடுத்தர தொழில்துறையினர் வந்திருந்தனர்.

You cannot copy content of this page