சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருந்த 3,000க்கும் மேற்பட்டோர் கைது

Pexels

சிங்கப்பூரில் மின்-வேப்பரைசர்கள் (vaporisers) அல்லது வேப்ஸ்களைப் (vapes) பயன்படுத்தியதாகவும், அதனை வைத்திருந்ததாகவும் மொத்தம் 3,912 பேர் பிடிபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் பிடிபட்டனர்.

அதேபோல இந்த வகை வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஊழியர்: கட்டுமான நிறுவனத்தில் பாதுகாப்பு இல்லை – செக் வைத்த MOM

2021ஆம் ஆண்டு நிலவரப்படி, இதே குற்றத்திற்காக 4,697 பேர் பிடிபட்டனர் என்றும், அதற்கு முந்தைய ஆண்டில் 1,266 பேர் பிடிபட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 811 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல், சிங்கப்பூரில் மின்-வேப்பரைசர்களைப் பயன்படுத்துவது, வாங்குவது மற்றும் வைத்திருப்பது தடைசெய்யப்பட்டாலும், அத்தகைய தயாரிப்புகள் ஆன்லைனில் விற்கப்படுவதும் நாட்டிற்கு கடத்தப்படுவதும் தொடர்வதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: திக் திக் நிமிடங்கள் – பயணி ஒருவர் கைது