தனியார் துறை ஊழியர்களுக்கு இந்தாண்டு குறைவான போனஸ் – கவலை கொள்ளச் செய்யும் அறிக்கை

Private sector employees in singapore may get lower bonus
Private sector employees in singapore may get lower bonus

தனியார் துறை ஊழியர்கள் நடப்பு நிதியாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்த வருடாந்திர போனஸ் பெற வாய்ப்புள்ளது என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதவள ஆய்வாளர்களின் கூற்றுப்படி தனியார் துறை நிறுவனங்கள் வழங்கக்கூடிய வருடாந்தர போனஸ் தொகை, ஒன்றரை மாதச் சம்பளத்துக்கும், 2.3 மாதச் சம்பளத்துக்கும் இடைப்பட்டிருக்கலாம் என்று cnaவிடம் தெரிவித்துள்ளனர்.

“பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள்” காரணமாக இந்த ஆண்டு போனஸ் வழங்குவதில் “கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்” என்று பொது சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் (எம்.டி.ஐ) 2019 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், மந்தமான உலகப் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதிச் சேவை நிறுவனங்கள் சராசரி போனஸை விட அதிகமாக வழங்க வாய்ப்புள்ளது என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.