படிப்படியாக அதிகரிக்கும் சம்பள முறை – சில்லறை விற்பனை துறையில் பரிசீலனை

(Photo Credit: Business Times)

சில்லறை விற்பனை துறைக்கு படிப்படியாக அதிகரிக்கும் சம்பள முறையை சிங்கப்பூர் பரிசீலித்து வருவதாக மனிதவள மூத்த அமைச்சர் ஜாக்கி முகமது (Zaqy Mohamad) நேற்று (பிப். 23) தெரிவித்துள்ளார்.

படிப்படியாக அதிகரிக்கும் சம்பள முறை என்பது குறைந்த ஊதிய ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலமும், மேலும் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் சம்பளத்தை உயர்த்த வடிவமைக்கப்பட்ட கொள்கையாகும்.

சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வசிப்பவரின் விவரம்!

இத்திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கியது. சில்லறை விற்பனை துறை இதில் சேர்க்கப்பட்டால், இந்த சம்பள முறையின்கீழ் அது ஆறாவது இடத்தில் இருக்கும்.

அதாவது இதற்கு முன்னர் 5 துறைகள் இந்த முறையை பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் மார்க்கெட்டுகள், கன்வீனியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் பேஷன் சில்லறை கடைகள் போன்றவற்றில் காசாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் போன்ற ஊழியர்களை இது உள்ளடக்கும்.

இதனை ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் உள்ள சில்லறை வர்த்தக கடையில் ஊழியர்களுடன் பேசிய பிறகு திரு ஜாக்கி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கடந்த அக்டோபரில் தொடங்கப்பட்ட குறைந்த ஊதிய ஊழியர்கள் தொடர்பான முத்தரப்பு பணிக்குழுவிற்கு அவர் தலைமை தாங்குகிறார்.

சிங்கப்பூரில் 100வது ஆண்டை நிறைவு செய்யும் உணவகம் – வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு இலவச பிரியாணி!