“எனக்கு சில வேலைகள் சாதகமாக நடக்க வேண்டும்” – அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த ஊழியர் கணேசன் சுப்பையாவுக்கு சிறை!

CPIB

தங்களுக்கு சாதகமாக சில வேலைகள் நடக்க வேண்டி பொதுப் பயனீட்டு கழக (PUB) அதிகாரிக்கு, துணை ஒப்பந்தப் பணிகளைச் செய்யும் நிறுவனம் ஒன்றின் திட்ட மேலாளர் லஞ்சம் கொடுத்துள்ளார்.

அதாவது, தரையில் குழாய் பதித்தல் போன்ற துணை ஒப்பந்தப் பணிகளைச் செய்யும் நிறுவனத்தில் திட்ட மேலாளர் மீது முன்னர் குற்றம் சாட்ட்டப்பட்டது.

இலவசம்!! இலவசம்!! காதலர் தின பரிசாக உணவு வகைகளை இலவசமாக வழங்கும் சிங்கப்பூர் உணவகம் – வெளிநாட்டு ஊழியருக்கும் இலவசம்!

லஞ்சம்

அவர், தளங்களில் குழாய்களை பதிப்பதற்கு முன்னுரிமை பெறுவது உட்பட, வேலை சுமுகமாக நடக்க வேண்டி PUB அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது.

PUB உதவிப் பொறியாளர் தன்னுடைய மேற்பார்வைக் கட்டணங்களை பெறுவதற்கு, அந்த திட்ட மேலாளரை அணுகினார், அதன்படி திட்ட மேலாளர் அவருக்கு லஞ்சமாக S$45,169 கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறை

பைப் ஒர்க்ஸ் ஊழியரான 52 வயதுமிக்க கணேசன் சுப்பையாவுக்கு இன்று திங்கள்கிழமை (பிப் 14) ஏழு மாதங்கள் & இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

PUB உதவிப் பொறியாளரான ஜமாலுதீன் முகமதுவுக்கு லஞ்சம் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டையும், தவறான கட்டண விவர பட்டியல் (invoice) தயாரித்ததாக இரண்டாவது குற்றச்சாட்டையும் கணேசன் ஒப்புக்கொண்டார்.

மேலும், மூன்றாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

குற்றம் நடந்த போது, பைப் ஒர்க்ஸ் மற்றும் கிரிஷ்கோ சிங்கப்பூர் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய இரண்டின் திட்ட மேலாளராக கணேசன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு உடந்தையாக செயல்பட்ட, ஜமாலுதீனுக்கு ஒன்பது மாதங்கள் மற்றும் 10 வாரங்கள் சிறைத்தண்டனையும், S$45,169 அபராதமும் கடந்த ஆண்டு நவம்பரில் விதிக்கப்பட்டது.

“விரைவில் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” – நாட்டு மக்களை அழைக்கும் சிங்கப்பூர்!