சிங்கப்பூர் முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி – பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்

Foreigners need approval to buy mixed commercial and residential properties, land in Singapore
(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் நாளை மறுநாள் செப். 15 மாலை 6.20 மணிக்கு, தீவு முழுவதும் PWS சைரன்கள் மூலம் முக்கிய தகவல் ஒலியை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை எழுப்பும்.

தீவு முழுவதும் இந்த பொது எச்சரிக்கை ஒலியை, ஆண்டு தோறும் பிப்ரவரி 15 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு SCDF எழுப்பும் என்பது அறிந்தது தான்.

சிங்கப்பூர் வங்கிகளில் வட்டி விகிதம் அதிகரிப்பு – நீண்ட வரிசையில் நின்ற வாடிக்கையாளர்கள்

SGSecure செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட கைப்பேசி மற்றும் Silent அல்லது Vibration தேர்வு செய்யாமல் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த எச்சரிக்கை ஒலிக்கும்.

எச்சரிக்கை ஒலியை நீங்கள் கேட்கும்போது, இரண்டு நிமிட செய்தியை பெற ஏதேனும் உள்ளூர் வானொலி நிலையம் அல்லது தொலைக்காட்சி சேனலுடன் உடனடியாக இணையுங்கள்.

இதனால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் SCDF கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இந்த ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் உயர்வு – அக்.1 முதல் அமல்