உலகின் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்..!

Qantas named safest airline in the world, Singapore Airlines lands in 6th

Singapore Airlines lands in 6th : உலகின் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் இயங்கும் விமான நிறுவனங்களின் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

ஏர்லைன்ரேட்டிங்ஸ்.காம் வெளியிட்டுள்ள இந்த முதல் 20 பட்டியலில் குவாண்டாஸ் (Qantas) ஏர்வேஸ் உலகின் பாதுகாப்பான விமான நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அளவுக்கு மீறி பயண உடமைகளை ஏற்ற மறுத்த சிங்கப்பூர் ஓட்டுநர்; வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய சுற்றுலா குழு..!

அதைத் தொடர்ந்து ஏர் நியூசிலாந்து மற்றும் தைவானின் ஈவா ஏர்வேஸ் ஆகியவை உள்ளன.

மேலும், இந்த பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆறாவது இடத்திலும், கேத்தே பசிபிக் ஏர்வேஸ் ஒன்பதாவது இடத்திலும், விர்ஜின் ஆஸ்திரேலியா ஹோல்டிங்ஸ் 10 வது இடத்திலும் உள்ளன.

இந்த வார தொடக்கத்தில், விமானப் பாதுகாப்பு வலையமைப்பு (Aviation Safety Network) கூறுகையில், 2019ல் ஆபத்தான விமான விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளின் சராசரியை விட 20 ஆக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் இந்த விபத்துகளில் பாதிக்கு மேற்பட்டவை வட அமெரிக்காவில் நிகழ்ந்தவை என்றும் கூறியுள்ளது.

இதையும் படிங்க : புத்தாண்டு அன்று இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட கோளாறு; பரிதவித்த சிங்கப்பூர் பயணிகள்..!