சிங்கப்பூருக்கு வந்த கத்தார் துணைப் பிரதமர் ஷேக் முகம்மது -‘இரு நாடுகளும் சிறிய நாடுகள்’ திரு.வோங் வெளியிட்ட முகநூல் பதிவு

qatar dpm sheik muhammed meets halima yaccob wong
கத்தாரின் துணைப் பிரதமர் ஷேக் முகம்மது அப்துல் ரஹ்மான் ஜசிம் அல் தானி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூருக்கு வந்திருக்கிறார்.ஆகஸ்ட் 11-ஆம் தேதியன்று இஸ்தானாவில் அதிபர் ஹலிமா யாக்கோபைச் சந்தித்துப் பேசினார்.மேலும்,துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங்கையும் சந்தித்தார்.
நீடித்த நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய பொருளாதார மேம்பாடுகள் தொடர்பாக இரு நாடுகளும் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர்.

சிங்கப்பூரும் கத்தாரும் சிறிய நாடுகள்.எனவே,இரு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான பல இலக்குகள் இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு கத்தாரின் முதலீட்டு ஆணையத்தின் ஆசிய அலுவலகம் சிங்கப்பூரில் திறக்கப்பட்ட போது திரு.வோங் அதை வரவேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.சந்திப்பிற்கு பிறகு சிங்கப்பூருக்கும் கத்தாருக்கும் இடையேயான நெருக்கமான நல்லுறவு மறுஉறுதி செய்யப்பட்டது.

எரிசக்தி,உணவுப் பாதுகாப்பு போன்றவற்றின் மேம்பாடுகள் தொடர்பாக மூத்த அமைச்சரும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோவை சந்தித்து திரு.ஷேக் கலந்துரையாடினார்.சிங்கப்பூர்-கத்தார் உயர்நிலைக் கூட்டமைப்பு இரு நாடுகளின் ஒத்துழைப்பை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முக்கிய தளமாக அமையும் என்பது குறித்து பேசப்பட்டது.

சட்ட உள்துறை அமைச்சர் கே.சண்முகம்,சமுதாய,குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஆகியோரையும் திரு ஷேக் சந்தித்துப் பேசினார்.