உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பயணிகள் நேரலையில் காண சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிறப்பு ஏற்பாடு!

Photo: Singapore Airlines Official Facebook Page

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி (FIFA World Cup 2022) கத்தாரில் நாட்டில் நவம்பர் 20- ஆம் தேதி அன்று கோலாகலமாக தொடங்கி, மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 18- ஆம் தேதி வரை நடைபெறும் போட்டியில் கத்தார், ஜெர்மனி, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றுள்ளனர்.

‘திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ஸ்கூட் விமான சேவை’- விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைக் காண அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கத்தார் நாட்டு அரசு செய்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் உள்ள புகழ்பெற்ற உணவகங்கள், விமான நிறுவனங்கள், மற்ற நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரலையைக் காணும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அந்த வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Singapore Airlines Group), தங்கள் நிறுவன விமானங்களில் பயணிக்கும் பயணிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை விமானத்தில் பயணித்த படியே நேரலையில் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022 போட்டிகளை 30,000 அடி உயரத்தில் இருந்தாலும் நேரலையில் பார்க்கலாம்.

“ப்ளூ வெரிஃபைடின் மறுவெளியீடு நிறுத்தி வைப்பு”- எலான் மஸ்க் அறிவிப்பு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு சொந்தமான விமானங்களில் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம். அதன்படி, அனைத்து போயிங் 787- 10 ரக விமானங்கள், போயிங் 737- 8 ரக விமானங்கள், ஏர்பஸ் A350, போயிங் 777- 300ER விமானங்கள் ஆகிய விமானங்களில் உள்ள இருக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள சிறிய டிவியில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நேரலையில் பார்க்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.