“உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022”- கத்தார் நாட்டிற்கு செல்ல தொடங்கியுள்ள சிங்கப்பூர் கால்பந்து ரசிகர்கள்!

Photo: FIFA World Cup Official Twitter Page

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நாளை (20/11/2022) கத்தாரில் கோலாகலமாக தொடங்குகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாக உலகக்கோப்பை கால்பந்து தொடரை கத்தார் நடத்துகிறது. பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, அர்ஜெண்டினா, ஸ்பெயின், உருகுவே உள்ளிட்ட 32 அணிகள் களமிறங்குகின்றன. உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் சிங்கப்பூர் நேரப்படி, அதிகாலை 12.30 மணிக்கும், மாலை 03.30 மணிக்கும், மாலை 06.30 மணிக்கும், இரவு 09.30 மணிக்கும் நடக்கிறது.

கண்ணாடி கதவு உடைந்து விழுந்து இரண்டு வயது குழந்தை காயம்! – பதறிச் சென்று கட்டியணைத்த பாட்டி!

இன்று (20/11/2022) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் தொடரை நடத்தும் கத்தார் அணியும், ஈக்குவடார் அணியும் மோதுகின்றன. இந்த தொடருக்காக மட்டும் கத்தார் அரசு சுமார் 220 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் நடத்தப்படும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் என்ற பெருமை பெறுகிறது. 1930- ஆம் ஆண்டு முதல் இதுவரை 20 உலகக்கோப்பை போட்டிகள் நடந்த நிலையில், பிரேசில் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது.

கத்தார் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூபாய் 342 கோடி பரிசாக வழங்கப்படவுள்ளது. இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 244 கோடியும், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 219 கோடியும் பரிசாக வழங்கப்படும். நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய் 203 கோடியும், காலிறுதியுடன் வெளியேறும் நான்கு அணிகளுக்கு தலா ரூபாய் 138 கோடியும் பரிசு வழங்கப்படவுள்ளது.

ஆறு வயதில் எவரெஸ்ட் அடிவார மலையேற்றம்! – சிங்கப்பூர் சிறுவனின் சிறப்பான மலையேற்றம்!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் 8 மைதானங்களில் பீர் விற்க ஃபிபா அமைப்பு தடை விதித்துள்ளது. உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் நாட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு, தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அந்நாட்டு அரசு செய்துள்ளது.

குறிப்பாக, சிங்கப்பூரில் உள்ள உள்ளூர் கால்பந்து அணி வீரர்கள் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும், உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவைக் காண காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில், ஒரு சிலர் போட்டியை நேரில் காண வேண்டும் என்று கத்தார் நாட்டிற்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஏற்கனவே, கத்தார் நாட்டிற்கு சென்றுள்ள சிங்கப்பூரர்கள் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகக்கோப்பை கால்பந்து தொடர்: சிங்கப்பூர், கத்தார் இடையே நேரடி விமான சேவையை வழங்கி வரும் கத்தார் ஏர்வேஸ்!

இதனால், சிங்கப்பூர் மற்றும் கத்தார் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை விமான நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.