சிங்கப்பூரில், மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காடை முட்டைகளுக்குத் தற்காலிகத் தடை!

quail eggs temporarily banned

மலேசியாவின் டெலிக்(Telic) பண்ணையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காடை முட்டைகளில் மருந்துப்பொருள் காணப்பட்டதன் எதிரொலியாக சிங்கப்பூர் அரசு அதற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

காடை முட்டைகளில் நிகெர்பஸின் (Nicarbazin) எனும் ரசாயனம் கண்டுபிடிக்கப்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ரசாயனம் பறவைகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

காடை முட்டைகளில் ரசாயனக் கலப்பு இல்லை என்பதை உறுதிசெய்யப் பண்ணை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், காடை முட்டைகள் மனிதர்களின் பயன்படுத்தப் பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதுவரை தற்காலிக தடை தொடரும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு மட்டும் சுமார் 17 மில்லியன் மலேசிய காடை முட்டைகள் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.