“தகுதி சம்பளத்தை மேலும் உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை” – மனிதவள அமைச்சர்

(Photo: TODAY)

உள்ளூர் தகுதிச் சம்பளத்தை மேலும் உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்று மனிதவள மூத்த அமைச்சர் ஜாக்கி முகமது நேற்று (செப் 14) தெரிவித்தார்.

மேலும், அந்த ஊதிய உயர்வு நிலையானதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

சமீபத்திய குறைந்த ஊதிய ஊழியர்களுக்கான விரிவாக்க ஆதரவுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்பினர்.

தடுப்பூசி போட்டுவிட்டதாக போலி சான்றிதழ் அளித்த வெளிநாட்டவர் மீது குற்றச்சாட்டு

இதுகுறித்த கேள்விகளுக்கு பதிலளித்த திரு ஜாக்கி, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் S$1,400 சம்பளம் வழங்க வேண்டிய தேவை குறித்து சுட்டிக்காட்டினார்.

இந்த புதிய நடைமுறை, முதலாளிகளுக்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மனிதவள அமைச்சகம் (MOM) புரிந்துகொள்வதாக அவர் கூறினார்.

எனவே, இப்போதைக்கு உள்ளூர் ஊழியர்களுக்கு தகுதிச் சம்பளத்தை மேலும் அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

உள்ளூர் ஊழியர்களுக்கு தகுதிச் சம்பளம், கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு முறை திருத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ல் S$1,000ல் இருந்த சம்பளம் தற்போது S$1,400ஆக உயர்ந்துள்ளது.

சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி!