ராஃபிள்ஸ் சிட்டி ஷாப்பிங் சென்டரில் ஆடவர் விழுந்து விபத்து!

Raffles City Man collapsing
(Photo: Stomp)

ராஃபிள்ஸ் சிட்டி ஷாப்பிங் சென்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19) மாலை ஒருவருக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அன்று மாலை 6 மணியளவில், Stomp பங்களிப்பாளர் ஒருவர் இந்த இந்த சம்பவத்தை நேரில் கண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

PIE மேம்பாலம் விழுந்த சம்பவம்: 11 வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக குற்றம் நிரூபணம்!

அந்த மாலின் லெவல் 1இல் ஆடவர் ஒருவர் கீழே விழுந்தார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் கண் புருவத்தில் ஒரு வெட்டு ஏற்பட்டு, நிறைய ரத்தம் வெளியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அனுப்பிய புகைப்படங்களில் அந்த ஆடவர் தரையில் கிடப்பதை காண முடிகிறது. மேலும், சம்பவ இடத்தில் துணை மருத்துவர்களையும், மால் ஊழியர்களையும் காணலாம்.

மாலை 5.55 மணியளவில் 252 நார்த் பிரிட்ஜ் சாலையில் (North Bridge Road) உதவி வேண்டி அழைப்பு வந்ததாகவும், ஆடவரை ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் சிங்கப்பூர் குடிமை (SCDF) பாதுகாப்பு படை தெரிவித்தது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த Work pass, Work permit வைத்திருப்பவர்களுக்கு தொற்று!