சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படும் ராபில்ஸ் சிலை…

Image Credits - VisitinSingapore.com

சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிகமாக மூடப்படும் ராபில்ஸ் சிலை. மன்னிப்பு கோரிய சிங்கப்பூர் பயணத்துறை கழகம்.

சிங்கப்பூர் ஆற்றின் கரைப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்டாம்போர்ட் ராபில்ஸ் சிலை சீரமைப்பு பணிக்காக தற்காலிகமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்றும் அச்சமயம் பொதுமக்கள் சிலையை பார்வையிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களுக்கு வசதி குறைவு ஏற்படலாம் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சிங்கப்பூர் பயணத்துறை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.