கிரேன் விபத்தில் உயிரிழந்த தமிழக தொழிலாளி வேல்முருகனுக்கு 2,623 பேர் நிதி உதவி!

More than S$158,000 raised for migrant worker who died in Novena crane incident

நோவெனா கிரேன் சம்பவத்தில் இறந்த தொழிலாளி வேல்முருகனுக்கு S$158,000 -க்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டுள்ளது.

நோவெனாவில் (Novena) உள்ள ஒரு பணிநிலையத்தில் கடந்த நவம்பர் 4, கட்டுமான கிரேன் இடிந்து விழுந்ததில் தமிழகத்தைச் சேர்ந்த வேல்முருகன் முத்தையா என்ற தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்துக்குச் சில நாட்கள் முன்னர் தான், தமது மனைவி கர்ப்பமாக உள்ளதை வேல்முருகன் அறிந்து நண்பர்களிடம் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பான Its Raining Raincoats (IRR) இத்தகவலை வெளியிட்டது.

இந்நிலையில், அவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், IRR இணையம் வழியாக நன்கொடை திரட்டி வந்தது.

இந்த நிதி திரட்டும் முயற்சியில் ஆரம்ப இலக்கு S$150,000 என நிர்ணயம் செய்யப்பட்டது.

சமீபத்தில், அந்த இலக்கு நிர்ணயித்த அளவை தாண்டியதால் முடிவுக்கு வந்துள்ளது.

வெல்முருகனின் குடும்பத்திற்காக மொத்தம் 2,623 பேர், மொத்தம் S$158,398 நன்கொடை அளித்துள்ளனர்.