வாசிப்பு விழா ( Read Fest) -2019

தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் வாசிப்பு விழா - 2019

தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பாக நடத்தப்படும் வாசிப்பு விழா வரும் ஜூன் 22 ஆம் தேதி சனிக்கிழமை விமர்சையாக தொடங்க உள்ளது. ஜூன் 22 ஆம் தேதியில் இருந்து ஜூலை 28 ஆம் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது.

இந்த வாசிப்பு விழாவின் தொடக்கத்தில் பிரபல உள்ளூர் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் சிறப்புரை ஆற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார்.

இவ்விழாவில் ‘இதற்கு Grab தேவைப்படாது’, ‘கதைகளோடு பயணித்தல்’, ஆகிய தலைப்புகளில் தன் வாழ்நாளில் சந்தித்த அனுபவங்களை பற்றி பேச உள்ளார், திரு. சித்துராஜ் அவர்கள்.

மேலும், பயணக் கட்டுரை பயிலரங்கு, எண்ண வெளிப்பாடு, கலையும் இலக்கியமும் நம் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு துணை வருகின்றன? வழிகாட்டி யாகவா? வழித்துணையாகவா? மற்றும் ‘என் எழுத்துப் பயணம்’ போன்ற சிறப்புறைகளும், நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

இதோடு மட்டும் அல்லாது இன்னும் நிறைய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

மேலதிக தகவல்களை அறிய:

https://www.nlb.gov.sg/golibrary2/e/journey-stories-from-around-the-world-75439442