சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரே நாளில் 447 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

Record 447 new coronavirus cases in Singapore
Record 447 new coronavirus cases in Singapore

சிங்கப்பூரில் புதிதாக 447 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 15) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 3,699ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு..!

மேலும், இன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 41 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 652ஆக உள்ளது.

புதிய சம்பவங்களில் பெரும்பாலானவை தங்கும் விடுதிகளுடன் தொடர்புடையவை. அதாவது புதிய சம்பவங்களில் 404 பேர் இதில் அடங்குவர், இவர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வேலை அனுமதி பெற்றவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: அனைத்து வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு..!

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 1,496 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

1,540 நபர்கள் மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.