வெளிநாட்டு ஊழியர்களுக்கு 56,000 முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகள் வழங்கிய சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்..!

Redcross helping to foreign workers in Singapore
Redcross helping to foreign workers in Singapore

வெளிநாட்டு ஊழியர்களுக்காக சுமார் 56,000 முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினிகளையும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விநியோகம் செய்துள்ளது.

சிங்கப்பூரில் தெம்பனிஸ் மற்றும் உபி ஆகிய வட்டாரங்களில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் இடங்களில் அந்த பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 3 நகரங்களுக்கு சில விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள ஜெட்ஸ்டார் ஆசியா..!

மேலும் வரக்கூடிய வாரங்களில் இன்னும் கூடுதலான முகக் கவசங்களை, ஏனைய தங்கும் விடுதிகளுக்கு அனுப்பவுள்ளதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த முயற்சிக்கு, கிருமிப்பரவலுக்கான வெளிநாட்டு ஊழியர் ஆதரவுக் கூட்டணியும் Project Chulia Street அமைப்பும் உதவியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக மொத்தம் 400,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் 250,000 வீட்டுப் பணியாட்களுக்கும் முகக் கவசங்களை வழங்க உள்ளதாக Temasek அறக்கட்டளை (ஏப்ரல் 19) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : COVID-19: 650,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வீட்டு பணியாட்களுக்கு இலவச முகக் கவசங்கள்..!