மீண்டும் விதிமீறல்களில் ஈடுபட்ட 14 கடைகளுக்கு தண்டனை – 74 தனிநபர்கள் சிக்கினர்

(Photo: Facebook / Clean & Green Singapore)

சிங்கப்பூரில் இந்த வார இறுதியில், மீண்டும் விதிமீறல்களில் ஈடுபட்ட 14 உணவு மற்றும் பான கடைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

இந்த சில விற்பனை நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதற்காக 11 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“லாரிகளில் ஏற்றிச்செல்லப்படும் ஊழியர்களை பேருந்துகளுக்கு மாற்றுவது சுலபமல்ல”

அதே நேரத்தில் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் கோவிட் -19 விதிகளை மீறியதற்காக 63 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மூடல் உத்தரவு பெற்றவை

  • Club Peaches
  • Alive @ SG Pub
  • Tangmen உணவகம்
  • Club Empire

தேக்கா நிலையத்தில் அதிகாரிகளின் எச்சரிக்கை செய்தும், முகக் கவசம் அணியாமல் இருந்த இருவருக்கு தலா S$300 அபராதம் விதிக்கப்பட்டது.

பேருந்து மோதிய விபத்தில் சைக்கிள் ஓட்டி மரணம்

Verified by MonsterInsights