கொரோனா எதிரொலி: ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா

Resorts World Sentosa lays off staff
Resorts World Sentosa lays off staff (Photo: Resorts World Sentosa)

சிங்கப்பூரில் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா (RWS) கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தொடர்ந்து செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஊழியர்களை covid19பணிநீக்கம் செய்வதாகக் புதன்கிழமை (ஜூலை 15) கூறியுள்ளது.

ஜென்டிங் சிங்கப்பூருக்கு (Genting Singapore) சொந்தமான ரிசார்ட், எத்தனை ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை கூற மறுத்துவிட்டதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையும் படிங்க : இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய இருவருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

கடந்த ஆண்டின் இறுதி நிலவரப்படி, இது 7,000க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது அனைத்து செலவுகளையும் மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், அத்தியாவசியமற்ற செலவினங்களை நீக்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நிர்வாகத்தின் சம்பளத்தை 30 சதவீதம் வரை குறைத்துள்ளது, ஆனால் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் கடினமான முடிவையும் எடுக்க வேண்டியிருந்தது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்த COVID-19 தொற்றுநோய், உலகளவில் பொருளாதாரத்தில் சவாலை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இது சுற்றுலாத் துறையில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் RWS குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனத்திற்குக் கீழ் சூதாட்டக்கூடம், யூனிவெர்சல் ஸ்டுடியோஸ் கேளிக்கைப் பூங்கா, ஹோட்டல் ஆகியவை செயல்படுகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg