சிங்கப்பூரில் இனிதே வர இருக்கும் பண்டிகையை முன்னிட்டு சாலைகள் மூடல்…!

St Andrew's Road, Connaught Drive and part of Fullerton Road will be closed to traffic from 4pm on New Year's Eve until 5am the next day

சிங்கப்பூரில் சிறப்பு பண்டிகை முன்னிட்டு சில சாலைகள் மூடப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2019 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில், இனிதே வர இருக்கும் புத்தாண்டை முன்னிட்டு அதற்கு முதல் நாள், மரினா பே வட்டாரத்திலும், மத்திய வர்த்தக வட்டாரத்திலும் உள்ள சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டிற்கு முதல்நாள் மாலை 4 மணிக்கு பாடாங்கைச் (Padang) சுற்றியுள்ள சாலைகள் மூடப்படும்:

  • செயின்ட் ஆண்ட்ரூஸ் ரோடு (St Andrew’s Road)
  • கொனாட் டிரைவ் (Connaught Drive)
  • எம்ப்பிரஸ் பிளேஸ் (Empress Place)

மாலை 6 மணிக்கு:

  • பேஃப்ரண்ட் அவென்யூ (Bayfront Avenue)
  • ஃபுல்லர்ட்டன் ரோடு (Fullerton Road)
  • ராஃபிள்ஸ் அவென்யூ (Raffles Avenue)
  • கோலியர் கீ (Collyer Quay)

இரவு 10 மணிக்கு: (கீழ்க்கண்ட சாலைகளின் சில பகுதிகள்)

  • எஸ்பிளனேட் டிரைவ் (Esplanade Drive)
  • மரினா பொலவர்ட் (Marina Boulevard)

இரவு 11 மணிக்கு:

  • ரிபப்ளிக் பொலவர்ட் (Republic Boulevard)
  • ராஃபிள்ஸ் அவென்யூ (Raffles Avenue)
  • மரினா வே (Marina Way)

மேலும், இந்த மூடல்கள் முடிந்து புத்தாண்டு அன்று அதிகாலை 2 – 5 மணி இடையில் சாலைகள் மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Seithi