தெம்பனிஸில் உள்ள உணவு நிலையத்தில், ஊழியர் பற்றாக்குறையை போக்கும் ரோபோக்கள்..!

Robots that clean floors, chase pigeons away among technologies being tested at Tampines food centre
(PHOTO: Google Maps)

தளங்களை சுத்தம் செய்தல், பூச்சிகளைக் கண்காணித்தல் மற்றும் உணவு நிலையங்கள் போன்ற வசதிகளைப் பராமரிப்பதில் விரைவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம்.

துப்புரவாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க, தெம்பனிஸில் உள்ள ஒரு சந்தையில் கூடுதலான ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஊழியர் தங்கும் விடுதிகளில் ஒன்பது பேருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

தளங்களை சுத்தம் செய்தல், பாதிக்கப்பட்ட மேற்கூரைகளை ஆய்வு செய்தல், லிப்ட் பேனல்களை கிருமி நீக்கம் செய்தல் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்களை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக பல ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

அந்த ரோபோக்கள் தெம்பனிஸில் உள்ள ஒரு சந்தை மற்றும் உணவு நிலையத்தில் சோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன, எதிர்காலத்தில் மற்ற உணவு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமிப்பரவல் சூழலில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு அவைகள் கைகொடுத்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது வேலைச் சுமையைக் குறைக்கவும் பேருதவி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரோபோடிக்ஸ் என்பது பொருளாதாரத்தை எப்படி மாற்றப் போகிறோம் என்பதில் மிக முக்கியமான பகுதியாகும் என்று திரு மசகோஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த ரோபோக்கள் சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்தால், அதனை வேறு உணவு நிலையங்கள் மற்றும் தொகுதியின் கழக வீட்டு புளோக்குகள் ஆகியவற்றில் எதிர்காலத்தில் பயன்படுத்தவும் திட்டமிடப்படுகிறது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் மன உளைச்சலைப் போக்க இணையம் வழி பாடல் போட்டி..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…