ரஷ்ய விமானத்தில் கடற்பறவைகள் கூட்டம் மோதியதில் விபத்து; அவசர அவசரமாக சோள வயல்வெளியில் தரையிறங்கியது!

Russian jet crash-lands in field outside Moscow after striking flock of gulls ( Photo : CNN)

கடற்பறவைகள் கூட்டம் மோதியதில் ரஷ்ய ஜெட் பயணிகள் விமானம் மாஸ்கோவின் விமான நிலையத்தின் வெளியே சோளம் விளைநில பகுதியில் அவசர அவசரமாக தரையிறங்கியது என ரஷ்யாவின் Federal விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோவின் Zhukovsky விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (இன்று) 226 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களுடன் Ural ஏர்லைன்ஸ் A321 புறப்பட்டது.

எதிர்பாராத விதமாக விமானம் தரை இறங்கியதன் காரணமாக 26 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

விமானம் எதிர்பாராதவிதமாக பறந்துவந்த கடற்பறவைகள் கூட்டத்தின் மீது பயங்கரமான மோதியதில் விமானத்தின் என்ஜின்கள் செயலிழந்தன, விமானி விமானத்தை விமான நிலையத்திலிருந்து அரை மைல் தொலைவில் ஒரு சோள வயல்வெளியில் அவசர அவசரமாக தரையிறங்கினார்.

தரையிறக்கப்பட்ட அந்த சோள வயல்வெளி, விமான ஓடுபாதையில் இருந்து 0.62 மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் 5 குழந்தைகள் உட்பட 26 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். விமானம் பலத்த சேதமடைந்தது.

மேலும் விமானம் அதிஷ்டவசமாக தீப்பிடிக்காத காரணத்தால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.