சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் கூடுதல் சலுகை – MOM..!

S$320m set aside to extend foreign worker levy rebates for construction, marine shipyard, process sectors
Photo: Raj Nadarajan/TODAY

கட்டுமானம், கப்பல் தளம் மற்றும் ரசாயன ஆலை போன்ற துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வைச்சலுகைகளை வழங்க மற்றொரு S$320 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சகம் (MOM) சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்துள்ளது.

COVID-19 நடவடிக்கைகள் காரணமாக பணிகளை மீண்டும் தொடங்க முடியாததால், இந்தத் துறைகளில் சுமார் 15,000 நிறுவனங்களில் பெரும்பாலானவை இன்னும் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று MOM செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் முழுவதும் நடத்திய தொடர் சோதனைகளில் போதைப்பொருள் குற்றவாளிகள் 10 பேர் கைது..!

ஆகஸ்ட் மாதத்தில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்று முழுமையாக நீங்கும் வரை இந்த நிலைமை நீடிக்கும், அதன் பின்னர் ஊழியர்கள் படிப்படியாக மீண்டும் வேலையைத் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று MOM குறிப்பிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சுமார் 85 சதவீத வெளிநாட்டு ஊழியர்கள் அதாவது சுமார் 262,000 ஊழியர்களுக்கு COVID-19 தொற்று இல்லை என்றும் (MOM) குறிப்பிட்டு இருந்தது.

இதில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை கழிவுகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • ஜூலை – 100%
  • ஆகஸ்ட் – 100%
  • செப்டம்பர் – 100%
  • அக்டோபர் – 75%
  • நவம்பர்- 50%
  • டிசம்பர்- 25%

இதற்கு முன்னர் ஜூலை மாதத்திற்கான தீர்வையில் 50 சதவீதம் கழிவு வழங்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஜூலை மாதத்திற்கான S$375 வெளிநாட்டு ஊழியருக்கான தீர்வையில் வழங்கப்படும் கழிவுகள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் MOM தனது வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

  • ஜூலை – $375
  • ஆகஸ்ட் – $375
  • செப்டம்பர் – $375
  • அக்டோபர் – $90
  • நவம்பர்- $90
  • டிசம்பர்- $90
(Table: Ministry of Manpower)

அதாவது மூன்று துறைகளிலும் உள்ள நிறுவனங்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு, S Pass மற்றும் வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு S$375 கழிவு அறிவிக்கப்பட்டது. முன்னர் ஜூன் 27 அன்று S$90 கழிவு அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் 2021 டிசம்பர் வரை கழிவு S$90ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 5ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg