சிங்கப்பூர் – மலேசியா இடையேயான பயணம் மீண்டும் தொடங்குவதற்கு முன் தேவையான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்..!

(Photo: Yong Jun Yuan/TODAY)

சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன் தேவையான நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் அமைக்கப்பட வேண்டும் வேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (ஜூன் 8) தெரிவித்துள்ளார்.

ஜொகூர் பஹ்ருவில் உள்ள மலேசியர்களை சிங்கப்பூருக்குப் பயணிக்கவும், வேலைக்குத் திரும்பவும் அனுமதிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக புத்ராஜெயா கூறியதையடுத்து, COVID-19 பல அமைச்சக பணிக்குழுவின் இணைத் தலைவராக இருக்கும் திரு வோங் ஊடக கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பாதிக்கப்பட்ட நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!

மலேசியாவுடனான பேச்சுவார்த்தைகள் பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் கலந்துரையாடலில் ஒரு பகுதியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் பயணிகளை வரவேற்பதாகவும், பயணத்தை மீண்டும் தொடங்குவதை காண விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அந்த பயணம் பாதுகாப்பான வழியில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர், இரு நாடுகளிலும் சோதனை நெறிமுறைகளின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.

அத்தகைய பயணம் மீண்டும் தொடங்குவதற்கு முன், கிருமித்தொற்று சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும், ஒரு தனிமைப்படுத்துதல் விதிக்கப்பட வேண்டும், அல்லது இரண்டு நடவடிக்கைகளின் தேவை என்பதையும் திரு வோங் சுட்டி காட்டினார்.

இருப்பினும், பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை முன்பு போல அதிகமாக இருக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கட்டுப்பாடுகளுடன், இரு தரப்பினருக்கும் பாதுகாப்பான முறையில் பயணம் அமைய வேண்டும் என்பதை பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் சிறப்பு விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் டிக்கெட் விவரம்..!