அதிக அளவு உப்பு சேர்க்கும் சிங்கப்பூரர்கள் – உப்பின் அளவைக் குறைக்க சுகாதார வாரியம் நடவடிக்கை

food
சிங்கப்பூர் சுகாதார மேம்பாட்டு வாரியம் சிங்கப்பூரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.சிங்கப்பூரர்கள் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மக்கள் உட்கொள்ளும் சோடியத்தின் அளவை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 15 சதவீதம் குறைக்க வாரியம் திட்டமிட்டுள்ளது.சோடியத்துக்கு மாறான பொருளை பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு வழிவகுக்கும்.
மேலும் இதுபோன்ற மாற்றுப் பொருள்கள் அனைவரும் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பதற்காக வாரியம் சில்லறை வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.அன்றாடம் உணவில் பயன்படுத்தும் உப்பின் அளவு அதிகமாகும் போது உடல் ஆரோக்கியம் படிப்படியாக மோசமடையும்.

சிங்கப்பூரர்களின் உணவில் உப்பின் அளவு கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.ஒரு நபர் சராசரியாக ஒரு நாளில் சுமார் 3,300 மில்லிகிராம் உப்பை உட்கொள்வதாக 2010-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட்டது.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி,ஒரு நாளில் ஒருவர் உட்கொள்ளக்கூடிய உப்பின் அளவு 2000 மில்லிகிராமுக்கு மேல்,அதாவது ஒரு தேக்கரண்டிக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்று கூறப்படுகிறது.

பொட்டாசியம் குளோரைடு போன்ற மாற்று உப்பினை பயன்படுத்தும்போது சோடியத்தின் அளவு குறையும்.இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாது.எனினும்,இது போன்ற மாற்று உப்பின் விலைகள் சாதாரண உப்பின் விலையை விட 10 மடங்கு அதிகம்.எனவே,கட்டுப்படியான விலையில் அனைவரும் பெறுவதற்கு வாரியம் சில்லறை வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து செயலபடவுள்ளது.