சாம்சங் அலைபேசி திரை சேதம் எதிரொலி? – சிங்கப்பூர் ஊடக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு..

சிங்கப்பூரில் நடக்க இருந்த அனைத்து ஊடக நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்துள்ளது சாம்சங் நிறுவனம்.

சாம்சங் நிறுவனம் இன்று நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால், அது அந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துள்ளது. மீண்டும் எப்போது நடைபெறும் என்ற தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் மடக்கு அலைபேசி திரை சேதமடைவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் சாம்சங் நிறுவனம் சிங்கப்பூர், சாங்காய், ஹாங்காய் ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த அனைத்து ஊடக நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்துள்ளது. இந்த திரை சேதம் குறித்த புகார்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அடுத்த மாதம் சில நாடுகளில் சாம்சங் தனது கேலக்ஸி ஃபோல்ட் அலைபேசியை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X